search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத சிலைகள்"

    பொதுவெளிகளில் பெரிய அளவிலான மத சம்பந்தப்பட்ட சிலைகள் அமைப்பதை கட்டுப்படுத்துமாறு மாகாண அரசுகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது. #Chinaorders #crackdownreligiousstatues
    பீஜிங்:

    சீனாவில் பிரசித்தி பெற்ற புத்த மதம் இந்தியாவை தாயகமாக கொண்டதாகும். அதே போல், தாவோயிசம் சீனாவை பூர்வீகமாக கொண்ட மதம் ஆகும். சீனாவில் மிகப்பெரிய மதமாக திகழும் புத்த மதத்தை தோற்றுவித்தவரான புத்தரின் சிலைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய எண்ணிக்கையில் காணப்படும்.

    சீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தேசிய அளவிலான 7 மத குழுக்கள் உட்பட 1 லட்சத்து 44 ஆயிரம் மத ரீதியான சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் 33 ஆயிரத்து 500 புத்த கோவில்களும், 9 ஆயிரம் தாவோயிசம் கோவில்களும் உள்ளன.

    சீனாவின் தற்போதைய பிரதமரான ஜின்பிங் பதவியேற்றபின், சீனாவின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். நாத்திக அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில், சீனாவில் பொதுவெளிகளில் மத சம்பந்தப்பட்ட சிலைகள் அமைப்பதற்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து பிரபல நாளிதழில் பேசிய மின்சு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சியாங் குன்சின், மத சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் மூலம் அரசு மதத்துக்கு எதிரானது அல்ல, மத ரீதியான வணிகமயமாக்கலை கட்டுப்படுத்தவே இந்த வழிமுறை கையாளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், வணிகமயமாக்கலின் மூலம் மதத்தின் புனிதம் கெடுவதோடு, சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். #Chinaorders #crackdownreligiousstatues
    ×